குரங்கணி முத்துமாலையம்மன் கோவில், ஆனி பெருந்திருவிழா (கொடை விழா) கடந்த
ஜூலை 15-ஆம் தேதி நடைபெற்றது. 22 ஆம் தேதி எட்டாவது நாள் கொடை விழா நடந்தது.
இதையொட்டி, கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள், தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி மகா தீபாராதனை, மற்றும் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து ஜூலை 23 ஆம் தேதி வழக்கம்போல் நித்ய பூஜைகள் முடிந்து கோவில் நடை சாத்தப்பட்டது. மறுநாள் ஜூலை 24 அன்று காலை வந்து நடை திறக்கும் போது இரண்டு உண்டியல்கள் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடு போயிருந்தது இது குறித்து ஏரல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக