திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா போத்தம்பாளையத்தில் இயங்கி வரும் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை கடந்த 25 ஆண்டு காலமாக தொடர்ந்து சேவையாற்றி வருகிறது
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அரசு மருத்துவமனை அருகில் பேருந்து நிழல் குடையில் ஆதரவின்றி பரிதவித்து வருவதாகவும் முதியவர் பற்றி அங்குள்ள பகுதி பொதுமக்கள் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மறுவாழ்வு இல்லத்திற்கு தகவல் தெரிவித்தனர். நியூ தெய்வ சிட்டி அறக்கட்டளையில் இருந்து நேரில் சென்று அந்த முதியவர் பற்றி விசாரித்தனர் முதியவருக்கு பெயர் விலாசம் சொல்ல தெரியவில்லை வயது 85 சுமார் இருக்கக் கூடும் இவர் அவிநாசி சாலைகளில் யாசகம் பெற்று தனது வயிற்றுப் பிழைப்பை நடத்தி வந்திருந்தார் இவர் உடல் முழுவதும் துர் நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் இந்த முதியவர் பக்கம் செல்லவே முகம் சுழிக்கும் அளவில் இவர் சடைமுடி தாடியுடன் அழுக்குடை அணிந்து மிகவும் அறுவறுப்பான தோற்றத்தில் இருந்த முதியவருக்கு முடித்திருத்தம் முகச்சவரம் செய்து குளிக்க வைத்து தூய்மைப் பணி செய்து தர வேண்டி அவிநாசி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை நிறுவனர் தெய்வராஜ் தலைமையில் முதியவரை மீட்டு அவருக்கு மொட்டை அடித்து முகச்சவரம் செய்து குளிக்க வைத்து தூய்மைப் படுத்துதல் போன்ற பணிகளை செய்தும் உணவும் குடிநீரும் வழங்கி உதவினர்
இந்த சேவை பணியில் அறக்கட்டளை நிறுவனர் ந. தெய்வராஜ், சிவகாமி , எம் சையது முகமது இளைஞர்கள் சந்தோஷ் தனசிறி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக