கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்புஅருகே கீழ்வளையமாதேவி கிராமத்தில் அமைந்துள்ள பாலாம்பிகை உடனுறை வானவகோடீஸ்வரர் (எ) பானுகோடீஸ்வரர் சிவாலயம் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று முடிவடைந்து அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் விழா கமிட்டியால் கடந்த பத்தாம் தேதி துவங்கப்பட்டு தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலைச் சுற்றி வந்து கோயில் உச்சிக்குச் சென்று கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து கோயில் கருவறையில் உள்ள வானவ கோடீஸ்வரருக்கு கும்பாபிஷேகநீர் தெளிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழா தருமையாதீன 27ஆவது குருமகா சந்நிதானம் முன்னிலையில் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சுற்றுப்புற கிராமத்து பொதுமக்கள் என ஏகப்பட்ட பக்தர்கள் திரண்டு வந்து பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பிறந்து வளர்ந்த கிராமமான இந்த வளையமாதேவி யில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் அவர் பங்கேற்று தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன், நியூஸ் 18 நெறியாளர் கார்த்திகை செல்வன் மற்றும் ஜப்பான் நாட்டிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் விமானம் மூலம் வந்திருந்து கும்பாபிஷேக விழாவை கண்டுகளித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக