திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவர்களுக்கு மரியாதை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் தலைவர் எம்.செந்தில் குமார் தலைமையில் மருத்துவப் பணியை பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வில் ரோட்டரி சங்க செயலாளர் கோத்தம் சந்த், சாசனத் தலைவர் எஸ் எஸ் வாசன், உறுப்பினர்கள் சேகர், காமராஜ், கார்த்திக் ராம், ராஜேஷ்குமார், பாலாஜி, மற்றும் ஆர் சி சி நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், தேவி கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக