திருக்கோவிலூரில் சார் ஆட்சியர் தலைமையில் ரத்ததான முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சார் ஆட்சியர் ஆனந்தகுமார் சிங் ரத்த தானம் வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், துணை வட்டாட்சியர் சதீஷ், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக