சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுகப் பயிற்சித் திட்ட துவக்க விழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு பயிலும் மாணவ மாணவியருக்கான அறிமுகப் பயிற்சி திட்டத்தின் துவக்க விழா கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் நிலோபர் பேகம் தலைமை வகித்து கல்லூரியின் சிறப்புகள் குறித்தும், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் எடுத்துக் கூறினார். தாவரவியல் துறைத் தலைவர் முனைவர் கோமளவல்லி வரவேற்புரை ஆற்றினார். காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் பார்த்திபன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்கள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் மாணவர்கள் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிட்டால் உங்கள் நோக்கம் நிறைவேறாமல் போய்விடும் என்றும், ஒழுக்கத்துடன் கூடிய கல்வி அவசியம் என்றும் அறிவுரை கூறினார். கல்லூரியின் அனைத்து துறைத் தலைவர்களும் முதலாமாண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர். புவி அமைப்பியல் துறைத் தலைவர் முனைவர் உதயகணேசன் நன்றி கூறினார். வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் மார்ட்டின் ஜெயப்பிரகாஷ் பிற்பகல் அமர்வில் மாணவர்களிடையே உரையாற்றினார்.
தமிழ் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பாரதி ராணி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் பேராசிரியர்களும், முதலாமாண்டு மாணவ மாணவியரும் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக