விவசாயிகள் ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டத்தில் விஜயாபதி, கூடன்குளம் பகுதி குளங்களை பொதுப்பணித்துறையின் கீழ் கொண்டு வந்து,
இராதாபுரம் கால்வாய் தண்ணீர் மேற்படி 15 குளங்களுக்கும் பாசானவசதி பெறும்
வகையில் பேச்சி பாறை அணை நீர் திறந்து குடிநீர் தட்டுபாடு வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் நிலையை போக்க தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்க நிர்வாகி காண்டீபன் விவசாயிகள் கூட்டத்தை ஒருங்கிணைத்தார்
விவசாயி நிஷாந்த் வரவேற்று பேசினார்.
சங்க செயலாளர் ராஜபவுல்., அந்தோனி பிரபாத் சிங், கோபால், லிங்கம், தில்லை பாண்டி மற்றும் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக