வெங்கலாபுரம் பகுதியில் ஓர்அணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி துவக்கி வைத்தார்
திருப்பத்தூர் , ஜுலை 5 -
திருப்பத்தூர் மாவட்டம் வெங்கலாபுரம் பகுதியில் ஓர் நிலையில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை வீடுகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் கொண்ட ஸ்டிக்கரை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஒட்டி துவக்கி வைத்தார் மேலும் வீடு வீடாக பொதுமக்களிடம் தங்களுக்கு மகளிர் இலவச விடியில் பேருந்து உங்கள் வீட்டில் பயணம் செய்தீர்களா மற்றும் மகளிர் உரிமைத்தொகை , முதியோர் ஓய்வூதிய தொகை, மகளிர் சுய நிதி உதவி கடன், மற்றும் குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தினை உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு கிடைக்கின்றதா என கேள்விகளை எழுப்பினார்.பின்பு அதற்கு ஒரு பெண்மணி அனைத்து திட்டங்களை யும் நாங்கள் பெற்றிருக்கிறோம் என்னை தெரிவித்தார். மேலும் ஒரு சலுகைபெற்று இருக்கிறேன் அது என்னவென்றால் இல்லம் தேடிக் கல்வியில் ரூபாய் 1000 பெறுகிறேன் என பெருமையுடன் கூறிய பெண்ணை பாராட்டி திராவிட விடியல் ஆட்சி என்பது இதுபோல் தான் இருக்கும் என பெருமிதம் தெரிவித்த எம் எல் ஏ வால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந் தனர். இந்த நிகழ்ச்சியில் உடன் கந்திலி ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ் கந்திலி ஒன்றிய துணைச் செயலாளர் சீனிவாசன். செல்வி.மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன் உடன் இருந்தனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக