சேத்தியாத்தோப்பில் நகை வாங்குவது போல் நடித்து நகையை எடுத்துக் கொண்டு ஓடியவரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 ஜூலை, 2025

சேத்தியாத்தோப்பில் நகை வாங்குவது போல் நடித்து நகையை எடுத்துக் கொண்டு ஓடியவரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு சந்தைப் பகுதியில் நகைக்கடை ஒன்று உள்ளது. இந்த நகைக் கடையில் சேத்தியாத்தோப்பு அடுத்த சென்னி நத்தம் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம்( 35) என்பவர் வேலை செய்து வருகிறார். அப்போது அவரிடம் 25 வயது மதிக்கத்தக்க ஒருவர் 1/2 அரைப்பவுன்செயின் வேண்டும் என கேட்டுள்ளார். முருகானந்தம் கடை உள்ளிருந்து எடுத்து வந்து அரை பவுன் நகையை காட்டிய போது  அவர் கையில் இருந்து நகையை பிடுங்கிக் கொண்டு  அந்த நபர் தப்பி ஓடினார். கடையில் வேலை செய்த முருகானந்தமும் கூச்சலிட்டுக்கொண்டே பின்னால் ஓடினார். அப்போது புதன்கிழமைசந்தை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தில் அங்கிருந்த பொதுமக்கள் ஓடிக்கொண்டிருந்த அவரைப் பிடித்து இழுத்து வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு  போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் புவனகிரி அருகே உள்ள கண்ணங்குடி கிராமத்தைச் சேர்ந்த  ஸ்ரீதர் (26) என்பது தெரிய வந்தது. போலீசார் விசாரணையில் செலவிற்கு பணம் இல்லாததால் நகையை எடுத்துக் கொண்டு ஓடியதாகஸ்ரீதர் தெரிவித்தார். போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து  கைது செய்து சிறையில் அடைத்தனர். மக்கள் நடமாட்டம் அதிகம் மிகுந்த பகுதியில், பட்டப் பகலில்   நடந்த இந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சி தருவதாக இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad