விழுப்புரம் (ஆகஸ்ட் 2, 2025):
முதல்வரின் மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் நோக்கில் நடைபெற்று வரும் #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் கீழ், திண்டிவனம் வட்டம் ஜக்காம்பேட்டை கிராமத்தில் இன்று சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சட்டமன்ற உறுப்பினர் திரு. மஸ்தான் (எம்எல்ஏ) அவர்கள் நேரில் கலந்து கொண்டு, பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்றுக்கொண்டார். பெறப்பட்ட மனுக்களை தொடர்புடைய துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளிடம் வழங்கி, அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்த முகாமின் வாயிலாக, பொதுமக்கள் தங்களது பிரச்சனைகள், கோரிக்கைகள் மற்றும் தேவைகளை நேரடியாக தெரிவித்து, அரசு வழங்கும் உதவிகளைப் பெறும் வாய்ப்பு பெற்றனர். முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள், தங்களது பகுதிகளில் நடைபெறும் இந்தத் திட்ட முகாம்களை முழுமையாகப் பயன்படுத்தி, மாநில அரசின் நலத்திட்டங்களிலிருந்து முழு பயனையும் பெறுமாறு எம்எல்ஏ மஸ்தான் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக