புதுச்சேரி – விழுப்புரம் மெமு ரயில் சேவை மேலும் ஒரு வாரம் ரத்து. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 2 ஆகஸ்ட், 2025

புதுச்சேரி – விழுப்புரம் மெமு ரயில் சேவை மேலும் ஒரு வாரம் ரத்து.


விழுப்புரம் (ஆகஸ்ட் 2, 2025):
 


புதுச்சேரி – விழுப்புரம் இடையே தினசரி காலை இயக்கப்படும் மெமு ரயில் சேவை, பராமரிப்பு பணிகள் காரணமாக மேலும் ஒரு வாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் அறிவித்துள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலிருந்து சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலை, கல்லூரி மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக பல்லாயிரக்கணக்கானோர் தினமும் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால், ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக சில ரயில்கள் தாமதமாக புறப்படுவதோ, மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதோ நடைபெற்று வருகிறது.


இந்த நிலைமை குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் வழங்கி வரும் ரயில்வே நிர்வாகம், திருச்சி கோட்டத்தின் பல நிலையங்களில் நடைபெறும் பராமரிப்பு பணிகளின் காரணமாக, ஏற்கனவே ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த புதுச்சேரி – விழுப்புரம் மெமு ரயில் சேவையை மேலும் ஒரு வாரத்திற்கு ரத்து செய்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad