மேட்டுப்பாளையத்தில் புத்தகத் திருவிழா நாளை 08.08.2025 துவங்குகிறது..
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ,மேட்டுப்பாளையத்தில் 5 புத்தகத் திருவிழா ,இ எம் எஸ் திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 8ஆம் தேதி நாளை தொடங்குகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட புத்தக ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வைக்கப்பட உள்ளன. பள்ளி மாணவர்களுக்கு தேவையான தமிழ், ஆங்கிலம், கதை ,கட்டுரைகள் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் இடம்பெறுகின்றன 8.8.25முதல் 17.8.25 வரை தினமும் காலை 10 முதல் இரவு 9மணி வரை நடைபெற உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக