மஞ்சூர் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

மஞ்சூர் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் நடைபெற்றது.


 மஞ்சூர் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் நடைபெற்றது.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ரன், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் பள்ளி மாணவிகளுக்கு நுகர்வோர் கல்வி மற்றும் பெண் கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 


நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாபி தலைமை தாங்கினார்.


பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பு ஆசிரியர் கிரன் மற்றும் ஆசிரியர்கள் எலிசபெத், சவிதா, கவிதா, ரேஷ்மா, சங்கீதா, ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் 


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது நுகர்வோர் கல்வி பெறுவதன் மூலம் நுகர்வோர் ஏமாற்றங்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு பெறுவதற்கான உரிமைகள், தகவல் பெறுவதற்கான உரிமை, தேர்வு செய்வதற்கான உரிமை, நுகர்வோர் புகார் தெரிவிப்பதற்காக உரிமை, நுகர்வோர் குறை தீர்க்கபெறும் உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான உரிமை, நுகர்வோர் கல்விக்கான உரிமை, அடிப்படை தேவைகள் கேட்டு பெறுவதற்கான உரிமைகள் வழங்கியுள்ளது.  இதன் மூலம் தரமான பொருட்களை அறிந்து கொண்டு தேவையான பொருட்களை வாங்கி பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். 


ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் பேசும்போது பெண் கல்வியில் பெரிய அளவு மாற்றம் ஏற்பட்டு பெரும்பாலும் படித்தாலும், உயர்கல்வி அளவில் சரியாக படிப்பது இல்லை.  விரைவான திருமணம், வெளியில் சென்று கல்வி கற்க பயந்து தடுப்பது உள்ளிட்ட காரணிகளாக அமைகிறது. எனவே உயர்கல்வி கற்க தற்போதே முயற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் நம்பிக்கையுடன் படித்து உயர வேண்டும் என்றார்.


நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad