கருங்குளம் வேங்கடாசலபதி கோயிலில் பவுத்ரோத்ஸவ திருவிழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

கருங்குளம் வேங்கடாசலபதி கோயிலில் பவுத்ரோத்ஸவ திருவிழா.

கருங்குளம் வேங்கடாசலபதி கோயிலில் பவுத்ரோத்ஸவ திருவிழா. 

ஸ்ரீவைகுண்டம் ஆக.7 கருங்குளம் வேங்கடாசலபதி கோயிலில் பவுத்ரோத்ஸவ திருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பவுத்ரோத்ஸவ திருவிழா நடைபெறுவது வழக்கம். 

திருக்கோயில்களில் தினசரி நடைபெறுகின்ற பூஜைகளில் ஏதேனும் விடுதல் ஏற்படும். அதனை தொடர்ந்து பரிகாரமாக ஆண்டுதோறும் பவுத்ரோத்ஸவ திருவிழா நடத்தப்படும். இந்த ஆண்டும் கடந்த மூன்று நாட்கள் நடந்தது. இரண்டாம் நாளான இன்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம் 8 மணிக்கு திருமஞ்சனம் 9.30 மணிக்கு ஹோமம் நடைபெற்றது. 

12 மணிக்கு பூர்ணாகுதி நடைபெற்றது. பின்னர் 1 மணிக்கு திருவாராதனம் சாற்று முறை தீர்த்தம் சடாரி பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் கருங்குளம் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நம்பி கிராம கமிட்டி சின்ன கண்ணன். ராமன். சேகர். கண்ணன்.நடராஜன்.ஜோசியர் வெங்கடேசன். கார்த்திகேயன் வெங்கட்ராமன்.சங்கர சுப்பிரமணியன் கள்ளப்பிரான் கோயில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். 

இறுதி நாளான நாளை காலை பூர்ணாகுதி நடந்து பவுத்ரோத்ஸவ மாலைகள் அர்ச்சகர் ராஜேஷ் படி களைந்து ஆழ்வார். ராமாநுஜர். மணவாளமாமுனி ஆகியோருக்கு சாற்றப்படும். மந்திராட்சதை வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad