மானாமதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 10ஆவது கிளை மாநாடு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025

மானாமதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 10ஆவது கிளை மாநாடு


மானாமதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 10ஆவது கிளை மாநாடு நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 10ஆவது கிளை மாநாடு கிளைத் தலைவர் தேவதாஸ் தலைமையிலும், மாவட்ட பொருளாளர் பாலமுருகன், பொதுப்பணித்துறை பொன்னையா, கவிஞர் சோமசுந்தரபாரதி ஆகியோர் முன்னிலையிலும் தாயமங்கலம் சாலையில் அமைந்துள்ள சிறுகதை எழுத்தாளர் செல்வகதிரவன் நினைவரங்கம் சுந்தர செந்தாமரை மஹாலில் நடைபெற்றது.


இதில் முனைவர் அழகுமுருகன் வரவேற்புரையாற்றினார். கிளைச்செயலாளர் ரசீந்திரகுமார் ஸ்தாபனம் மற்றும் செயல் அறிக்கை சமர்ப்பித்து பேசினார். இம்மாநாட்டை வாழ்த்தி நகர்மன்ற துனைத்தலைவர் பாலசுந்தரம், முன்னாள் தலைமையாசிரியர் பட்டிமன்ற பேச்சாளர் திருமாவளவன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் பராமாத்மா, தாய் இல்ல நிறுவனர் புஷ்பராஜ் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர். 


அதனைத் தொடர்ந்து ஓவிய கண்காட்சியை முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஏ. சி. மாரிமுத்து, புத்தக கண்காட்சியை நகர்மன்ற உறுப்பினர் சித்ரா மன்னர் மன்னன், புகைப்பட கண்காட்சியை சீமைச்சாமி, மண்பாண்ட கண்காட்சியை நகர்மன்ற உறுப்பினர் சோமசதிஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். சிறப்பாக சமூக சேவையாற்றிய ஆர். ஆர். ஆம்புலன்ஸ் உரிமையாளர் ராஜேந்திரனை பாராட்டி விருது வழங்கப்பட்டது. 


தொடர்ச்சியாக மானாமதுரையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்கிடவும், நூலகத்திற்கு அடிப்படை வசதிகள் செய்திடக்கோரியும், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அடிப்படை வசதியான விளையாட்டு மைதானம் அமைத்திட கோரியும், பள்ளி பாடப் புத்தகங்களில் மண்பாண்டங்களின் சிறப்புகள் குறித்து சேர்க்கவும், மானாமதுரையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கியதற்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்களை முன்மொழிந்து மாவட்டக் குழு உறுப்பினர் நந்தினி, ஆனந்தகுமார், லூர்து, பாண்டி, ராஜாராமன், ஆசிரியர் குரு செல்வம், சரவணக்குமார், ஆகியோர் பேசினார்கள். தேசிய விருது பெற்ற குறும்படங்களை அலைகள் நாராயணன் திரையிட்டார். 


இம்மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு தலைவராக தேவதாஸ், செயலாளராக ரசீந்திரகுமார், பொருளாராக பாரதிதங்கராஜ் உட்பட துணை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்களாக 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக ஆசிரியர் சபரிராஜன் நன்றியுறையாற்றினார். மேலும் இந்நிகழ்வில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad