ஆடி பொங்கல் விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025

ஆடி பொங்கல் விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா

 


மானாமதுரை கன்னார் தெரு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் 157ஆம் ஆண்டு ஆடி பொங்கல் விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கன்னார் தெரு விஸ்வகர்மா மகா சபை நடத்தும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் 157 ஆம் ஆண்டு ஆடி பொங்கல் முளைப்பாரி உற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்ற நிலையில், விசுவாவசு வருடம் ஆடி மாதம் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.


கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி காப்பு கட்டி விழா தொடங்கப்பெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக சந்தன கரகம், பால்குடம், அழகு குத்தி கோயில் முன்பாக பூக்குழி இறங்கும் விழா, அக்னிச்சட்டி, பொம்மைகள் வாங்கி கோயிலில் செலுத்துதல், பொங்கல் விழா அம்மன் கரகம் எடுத்து வருதல் மற்றும் அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்று முடிந்தது குறிப்பிடத்தக்கது. 


இந்நிகழ்வில் விஸ்வகர்மா ஸ்ரீ அக்கசாலை அன்னதான பிள்ளையார் அறக்கட்டளை நிர்வாகிகள், விஸ்வகர்மா மகாசபை சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர், விஸ்வகர்மா இளைஞர் பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர், விஸ்வகர்மா அன்னதான குழு, கன்னார் தெருவை சேர்ந்த பொதுமக்கள், மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதியில் உள்ள பக்தகோடி பெருமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad