பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சுமார் 11 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழல் கூடம் சீலிங் உடைந்து பொது மக்கள் அச்சம்!
குடியாத்தம் , ஆகஸ்ட் 9 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சீவூா் ஊராட்சிக்கு உட்பட்ட கல்லூர் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சுமார் 11 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழல் கூடம் கட்டப்பட்டது இந்த பயணியர் நிழல் கூடத்தை கடந்த ஏப்ரல் மாதம் நாடா ளுமன்ற உறுப்பினர் டி எம் கதிர் ஆனந்த் அவர்கள் திறந்து வைத்தார் திறப்பு விழா வின் போது கட்டப்பட்டிருந்த பூமாலைகள் வாடாத நிலையில் மேற்கூரை சீலிங் உடைந்தது விழுந்தது இது பொதுமக்களு க்கு பெரிதும் வியப்பாக ஏற்பட்டது சுமார் 11 லட்சம் செலவில் கட்டப்பட்ட பயணியர் நிழற்கூடம் திறந்த இரண்டு நாட்களிலே சீலிங் உடைந்தது பொதுமக்கள்மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது அன்றைய தின மே அவசர அவசரமாக மேற்கூரை சரி செய்யப்பட்டது மீண்டும் நேற்று இரவு திடீ ரென விழுந்து உள்ளது இதனால் பொது மக்கள் மத்தியில் பீதி ஏற்படுகிறது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக