தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிலை வைக்க முக்கிய கட்டுப்பாடுகள் என்னென்ன தெரியுமா! அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 9 ஆகஸ்ட், 2025

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிலை வைக்க முக்கிய கட்டுப்பாடுகள் என்னென்ன தெரியுமா! அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு !

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா. சிலை வைக்க முக்கிய கட்டுப்பாடுகள். என்னென்ன தெரியுமா! அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு !
வேலூர் , ஆகஸ்ட் 9 -

வேலூர் மாவட்டம் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தமிழகம் தொன்று தொட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னிலை வகித்து வருகிறது. கடல், ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் குடிநீர் மற்றும் வாழ்வாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக இருப்பதால் அவற் றை பாதுகாப்பது மக்களின் கடமை என வலியுறுத்தப்பட்டுள்ளது.மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல் களின் படி (விவரங்கள்: www.tnpcb.gov.in), விநாயகர் சிலைகள் மாவட்ட நிர்வாகம் குறிப்பிடும் இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழலை மாசு படுத்தாமல் பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கான முக்கிய வழிமுறைகள்:
1.சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகள் மட்டும் களிமண் சிலைகள் மட்டுமே அனுமதி.Plaster of Paris (PoP), பிளாஸ்டிக், தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவைகள் முற்றிலும் தடை.
2.ஆபரணங்கள் மற்றும் அலங்காரம்
சிலைகளின் ஆபரணங்கள் உலர்ந்த மலர்கள், வைக்கோல் போன்ற இயற்கை பொருட்களால் செய்யப்பட வேண்டும்.
பளபளப்பிற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம்.
3.ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், தெர்மாகோல் தடை சிலைகள் மற்றும் பந்தல்களில் வைக்கோல் போன்ற சுற்றுச்சூழல் நட்பு பொருட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

4.நச்சு நிறங்கள் தடை நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயங்கள், எண் ணெய் வண்ணங்கள், எனாமல், செயற் கை சாயங்கள் பயன்படுத்தக்கூடாது.
நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை நிறங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
5.இயற்கை அலங்காரங்கள் மட்டும்
வண்ணப்பூச்சுகள் மற்றும் நச்சு இரசாயனப் பொருட்களுக்கு பதிலாக, இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் பயன்படுத்தப்பட வேண்டும்.
6.அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் கரைக்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் குறிப்பிடும் இடங்களில் மட்டுமே மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளி ன்படி கரைக்க வேண்டும்.
விழிப்புணர்வு !
விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் கொண்டாட மாவட்ட நிர்வாகம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஒவ்வொ ருவரின் பொறுப்பு என்றும், அனைவரும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (தமிழ்நாடு மாசு கட்டுப் பாட்டு வாரியம்) ஆகியோரை அணுகலாம்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad