தமிழ்நாடுவிஸ்வகர்ம நண்பர்கள் நலச் சங்கம் சார்பில் நாளைவேலூரில்25வது ஆண்டாக ஆவணி அவிட்டம் விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 9 ஆகஸ்ட், 2025

தமிழ்நாடுவிஸ்வகர்ம நண்பர்கள் நலச் சங்கம் சார்பில் நாளைவேலூரில்25வது ஆண்டாக ஆவணி அவிட்டம் விழா!

தமிழ்நாடுவிஸ்வகர்ம நண்பர்கள் நலச் சங்கம் சார்பில்  நாளைவேலூரில்25வது ஆண்டாக ஆவணி அவிட்டம் விழா!

வேலூர் , ஆகஸ்ட் ‌9 -

வேலூர் மாவட்டம் ஆவணி மாதம் பௌர் ணமி அவிட்டம் நட்சத்திர தினத்தன்று பூணல் அணிபவர்கள் அனைவராலும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பக்தி பூர்வமான பண்டிகை  இந்த நாளில் பூணல் அணிபவர்கள் தங்கள் அணிந்து ள்ள பழைய பூணல் மாற்றும் விதமாக புதிய பூணூல் காயத்திரி மந்திரம் உச்சரி த்து அணிந்து கொண்டு பின் பழைய பூணூலை கழற்றிவிடுவர்.இப்படிப்பட்ட இவ்விழா ஆவணி அவிட்டம் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர் கள்நலச்சங்கம் சார்பில் வேலூர் மாந கரம், பேரிப்பேட்டை, காந்திரோடு அடுத்த கே.வி.எஸ்செட்டித்தெருவில் அமைந்து ள்ள வீரபிரம்மங்கார் மடத்தில் 25ஆவது ஆண்டாக ஆவணி அவிட்டம் என்னும் பூணல் மாற்றும் விழா 09.08.2025காலை 10.30 மணியளவில்  நடைபெற்றது.
விழாவிற்கு தலைவர் சி.தோஜோமூர்த்தி தலைமை தாங்கினார் ஒருங்கிணைப்பா ளர்ஞான.நடராசன்வரவேற்றுப் பேசினார்
விசுவ மலர் குழுத் தலைவர் எம் செல்வ ராஜ், துணைத்தலைவர் எல்.பன்னீர்செல் வம், எம்.ஞானசம்பந்தம், எம்.அண்ணா மலை   ஆகியோர் முன்னிலை வகிக்கி த்து பேசினர்.  ஆலயத்தின் அர்ச்சகர் ஜெ.குப்புசாமி ஆச்சாரி மற்றும் குப்பன் ஆச்சாரி ஆகியோர் ஆகியோர் வேத மந்தி ரங்கள் ஓதி பூணல் மாற்றும் நிகழ்வினை நடத்தினார். துணைச்செயலாளர் எம் அன்பரசு  இணை செயலாளர் எம்.செல் வரஜ் செயற்குழு உறுப்பினர்கள் ஜெ. ஜெயபிரகாஷ், கோ.கார்த்திகேயன்,  எஸ்.தீனதயாளன், எல் திருநாவுக்கரசு  தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணி, துரைசாமி, சந்திரசேகர்தாமரைசெல்வன் டி.விஷால்,  மனோகரன் சிவப்பிரகாசம்,  மணி,  என்.சுந்தரமூர்த்தி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்று பூணல் மாற்றினர். காலை 10. 30மணிமுதல் பிற்பகல் 12 மணிவரை நிகழ்வு நடை பெற்றது.சுமார் 200 பேர் பங்கேற்று பூணூலை மாற்றிக் கொண்டனர்.
 
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad