சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பிரமிடு IAS அகடமி இலவச பயிற்சி மூலம் மருத்துவராகும் மாணவர்களுக்கு பாராட்டு விழா.
நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மூலம் மருத்துவராகும் கனவு நிறை வேறியுள்ள. 14 அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் 4 அரசு அல்லாத தனியார் பள்ளி மாணவர்கள்
காரைக்குடி பிரமிடு IAS அகடமி மூலமாக, அரசு பள்ளிகளில் , அரசு உதவி பயிலும் பள்ளிகளில் மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஒரு ஆண்டு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் , இந்த ஆண்டுக்கான MBBS மற்றும் BDS படிப்புக்கான கலந்தாய்வு 30.07.2025 அன்று நடை பெற்றது.
இந்த பயிற்சியில் பங்கு பெற்ற அரசு பள்ளி மாணவர்களில் பத்து மாணவர்களுக்கு MBBS படிப்பும், மூவருக்கு BDS படிப்பும் கிடைத்துள்ளது.
தனியார் பள்ளிகளில் பயின்று இலவச பயிற்சி பெற்று கலந்தாய்வுக்காக காத்திருக்கும் மூன்று மாணவிகளுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெற இருக்கும் கலந்தாய்வில் எம் பி பிஎஸ் கிடைக்க மிகுந்த வாய்ப்பு உள்ளது.
பிரமிட் அகாடமியின் இலவச நீட் பயிற்சியின் மூலம் அரசு கல்லூரிகளில் மருத்துவ படிப்பில் சேர இருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கான பாராட்டுவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள். டாக்டர். P. சுரேஷ் குமார், B.L., M.B.A., Ph.D., (மண்டல இணை இயக்குநர் (ஓய்வு) வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஒருங்கிணைப்பாளர், அழகப்பா பல்கலைக்கழக படிப்பு வட்டம்.) திரு.T.முத்துராமலிங்கம் M.Sc, B.Ed, M.Phil., (மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் முதுநிலை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, பீர்கலைக்காடு)
நாள் : 17.08.25 (Sunday)நேரம் 10.30 AM இடம் APJ BUILDING (பிரசன்னா மஹால் அருகில்) Director, Prof.C.S.. M.Tech., இயக்குனர், பிரமிட் ஐஏஎஸ் அகாடமி, காரைக்குடி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக