தமிழக அரசின் பசுமை ஆர்வலர் விருது பெற்ற அறிவியல் ஆசிரியர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கட்டபெட்டு பாக்கிய நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அறிவியல் ஆசிரியருக்கு தமிழக அரசு பசுமை ஆர்வலர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பாக மாவட்ட அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சிறப்பாக பங்களித்த தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக அரசின் கிரீன் சாம்பியன் அவார்ட் எனப்படும் பசுமை ஆர்வலர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விருது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் உதகை கிளையின் செயலரும் கட்டபெட்டு அருகே உள்ள பாக்கிய நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் அறிவியல் ஆசிரியருமான திரு. சுந்தரம் லிங்கப்பன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் சுற்றுச்சூழலில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முறைகளை கண்டறிந்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் கேரட்டுகளை சுத்தப்படுத்தும் அறிவியல் முறை, நீர் நிலைகளை சுத்தப்படுத்தும் ரோபோக்கள், விவசாயத்தில் பலவகையான செயல்பாடுகளை செய்யும் ரோபோக்கள் மற்றும் மாநில தேசிய அளவில் சுற்றுச்சூழலை குறித்த ஆய்வு கட்டுரை சமர்ப்பித்துள்ளமைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சாதனை படைத்த ஆசிரியருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு. ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள், மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச் செயலர் திரு. முகமது பாதுஷா, மாநில கருத்தாளர் திரு . கே .ஜே. ராஜு, மாவட்ட தலைவர் தலைமையாசிரியர் திரு. சங்கர், செயலர் திரு. மணிவாசகம் மற்றும் அறிவியல் இயக்க உறுப்பினர்கள் ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்திகள் ஒருங்கிணைப்பாளர் K .A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக