கோவை கா.கா. சாவடி பகுதியில் உள்ள தானிஷ் அஹமது தொழில் நுட்பக் கல்லூரியில் 79 வது சுதந்திர தின விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

கோவை கா.கா. சாவடி பகுதியில் உள்ள தானிஷ் அஹமது தொழில் நுட்பக் கல்லூரியில் 79 வது சுதந்திர தின விழா


 கோவை கா.கா. சாவடி  பகுதியில் உள்ள தானிஷ் அஹமது தொழில் நுட்பக் கல்லூரியில் 79 வது  சுதந்திர தின விழாவானது  கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் இயக்குனர் திரு.கே.ஏ. அக்பர் பாஷா அவர்கள்   தலைமை வகிர்த்தர்,  கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி திரு. ஏ.தமீஸ் அகமது  அவர்கள்   முன்னிலை வகிர்த்தர். இதில் நாட்டு நலப்  பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.நா.தினேஷ்குமார், உடற்கல்வி இயக்குனர் திரு.மௌலி, திரு. யோகேஸ்வரன் மற்றும் அனைத்து துறை  தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், திரு.ப.சந்திரசேகரன், செல்வி.ஆதிரா, கல்லூரி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.தேசிய கொடியினை கல்லூரியின் முதல்வர் முனைவர்.கே.ஜி.பார்த்திபன் ஏற்றி சுதந்திர தின சிறப்புரை ஆற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தனது உரையில் சாதி, மதம் கடந்த சமுதாய ஒற்றுமை காக்க வேண்டும் மற்றும்  மாணவ மாணவியர்கள் வேட்கையுடனும் தற்போது நிலவும் தங்களது புதிய தொழிநுட்ப கல்விக்கு ஏற்றவாறு திறன் மேம்பாட்டு பயிற்சியினை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad