வேலூர் மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் சிறப்பாக பணிபுரிந்து
19 வழக்குகளில் ரூ.45,83,671 மீட்டுத்தரப் பட்டது!
வேலூர் , ஆகஸ்ட் 6 -
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் A.மயில்வாகனன், இ.கா.ப., அவர்க ளின் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை
இணையவழி குற்ற பிரிவு அவர்களின் மேற்பார்வையில், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இணையவழி குற்றங்கள் குறித்தும், அவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க தேவையான வழி முறைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி, சைபர் க்ரைம் போலீசார் விழிப்பு ணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலை யில், வங்கி KYC/PAN Card புதுப்பித்தல், ATM/Credit Card செயலிழப்பு, குறுஞ்செ ய்தி /வாட்ஸ்அப் மூலம் தெரியாத நபரிட மிருந்து பெறப்பட்ட லிங்க், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் பரிசுக் கூப் பன், ஆன்லைன் கடன் செயலி, சமூக வலைதள விளம்பரங்கள், Crypto/Bitcoin/ Stock Market முதலீடுகள், ஆன்லைன் வர்த் தகம், ஆன்லைன் பகுதி நேர வேலை
பள்ளி /கல்லூரி ஊக்கத்தொகை, ஆன் லைன் சூதாட்ட செயலிகள் போன்ற பல் வேறு இணையவழி குற்றங்களில் பாதிக் கப்பட்ட ஆசிரியர், மருத்துவர், தொழில்து றை பிரிவினர், தொழிலதிபர்கள், அரசு மற்றும் அரசு அல்லாத துறை பணியாளர் கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கள் போன்ற பல்வேறு துறையில் பணி யாற்றுபவர்களின் புகார்கள் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் பதிவு செய் யப்பட்டு, வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலை யில், வேலூர் மாவட்ட காவல் அலுவலகத் தில் இயங்கி வரும் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில், கடந்த ஜீலை மாதம் பெறப் பட்ட புகார்களின் அடிப்படையில், விசாரணை மேற் கொண்ட சைபர் க்ரைம் போலீ சார், துரித நடவடிக்கையின் மூலம் 19 வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, இன்று (06.08.2025) தேதி, அவர்கள்இழந்த ரூ.45,83,671/- (நாற்பத்து ஐந்து இலட்சத்து எண்பத்துமூன்றாயிரத்து அறநூற்றி எழு பத்தியோறு ரூபாய்) பணத்தை மீட்டு, உரி யவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அவர்களின் முன்னிலையில் ஒப்ப டைக்கப்பட்டது.மேலும், இனிவரும் காலங் களில் இதுபோன்ற சைபர் குற்றங்களை யாரேனும் சந்திக்க நேர்ந்தால், கால தாம தமின்றி உடனடியாக 1930 என்ற எண்ணி ற்கு அழைத்தோ அல்லதுhttps://cybercrime .gov.in/ என்ற இணையதளத்திற்குசென்று தங்களின் புகார்களை பதிவு செய்யலாம் என்பதை வேலூர் மாவட்ட சைபர் க்ரைம் காவல்துறையின் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என தெரிவித்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக