உலக தாய்ப்பால் வார விழா.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ளபின்னவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடைப்பெற்றது.
ஆகஸ்ட் 1 முதல் 7 வரையில் கொண்டாடப்பட்டு வரும் இவ் விழாவை பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லையன்ஸ் சங்கத்தின் சார்பில் தலைவர் G.V.ராஜ்குமார் தலைமையில் செயலாளர் G.பிரதீஸ் மற்றும் பொருளாளர் S. ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் திருமதி சரண்யா அவர்கள் வரவேற்புரையுடன் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. தாய்ப்பால் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் S.பாண்டியராஜன் சிறப்புரையாற்றினார். சுமார் 50 கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் PRO சுப.பெரியசாமி, S.மைதீன் பிச்சை, A.முத்துக்குமார், G.V.நடராஜன் மற்றும் பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தின் செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பேராவூரணி நிருபர் நீலகண்டன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக