பின்னர், கடந்த மே 18-ஆம் தேதி, ஜெயசூர்யா, அவரது நண்பர்கள் பிரவீன் (அரசகுழி பகுதி) மற்றும் ஜீவன் (புதுகூரைபேட்டை) ஆகியோருடன் பாண்டிச்சேரிக்கு புது துணி வாங்க சென்று திரும்பியபோது, தோப்புக்கொல்லை பகுதியில் மழையினால் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாகவும், ஜெயசூர்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் இருந்த பிரவீன் மற்றும் ஜீவன் இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இருப்பினும், மகனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக ஜெயசூர்யாவின் தந்தை முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜெயசூர்யாவின் இறப்பு தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளது. மேலும், உரிய விசாரணையை மேற்கொள்ளுமாறு குள்ளஞ்சாவடி காவல் நிலையத்திற்கும் வழிகாட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக