வேலூர் அருகே மண்ணெண்ணெய் குண்டு வீசிய 2 பேர் கைது!
வேலூர் , ஆகஸ்ட் 4 -
வேலூர் மாவட்டம் மேல்மொணவூர் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் விஜயசுரேஷ் (வயது 53),கூலி தொழி லாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மாவிஸ் (வயது 21), அர்ஜூனன் (வயது 27) ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று மாவிஸ் மற்றும் அர்ஜூனன் ஆகிய 2 பேரும் விஜயசுரேஷின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டை வீசினர். இதுகுறித்த புகாரின் பேரில் விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிந்து மாவிஸ், அர்ஜூனன் 2 பேரையும் கைது செய்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக