கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த சௌந்தரசோழபுரம் வெள்ளாற்றில் கடலூர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் புதுமன தம்பதிகள், பெண்கள் வெள்ளாற்று மணலில் முளைப்பாறிகளை ஏந்திஆற்றுக்கு சென்று, தூய்மையான இடத்தில், பசுஞ்சாணம் மற்றும் ஆற்று மணலால் பிள்ளையார் பிடித்து வைத்து, அவற்றின் முன்னால் முளைப்பாறிகைகளை வரிசையாக வைத்து, பச்சரிசி, சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் ஊற்றிக் கலந்து விநாயகரின் முன்னால் வைத்து வேண்டினர். .
ஆற்றங்கரையில் வைத்து சுமங்கலி பெண்கள் தாலிக்கு புது மஞ்சள் கயிறு மாற்றி கொண்டனர். ஏற்கனவே கழுத்திலிருந்த தாலிக்கயிறு மற்றும் திருமண மாலைகளை ஆற்றில் உள்ள தண்ணீரில் விட்டு விட்டு, புதிய மஞ்சள் கயிற்றில் தாலியைக் கோர்த்து, கணவன் மூலமாகவோ அல்லது சுமங்கலிப் பெண்கள் மூலமாகவோ தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டனர். பின்னர், புதுமணத் தம்பதிகள் தங்கள் திருமணத்தில் பயன்படுத்தப்பட்ட மாலைகள் உள்ளிட்டவைகளை ஆற்று நீரில் விட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக