கோத்தகிரியில் ஆகஸ்ட் 20 முதல் 24 வரை புத்தகத் திருவிழா.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நீலகிரி மாவட்ட கிளை, கோத்தகிரி அரிமா சங்கம் மற்றும் கோத்தகிரி கிளை நூலக வாசகர் வட்டம் ஆகிய அமைப்புகள் இணைந்து கோத்தகிரியில் இம்மாதம் (ஆகஸ்ட் ) 20 ம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் காமராஜர் சதுக்கத்தில் உள்ள HRM மண்டபத்தில் 'கோத்தகிரி புத்தக திருவிழா 2025 ' என்ற தலைப்பில் புத்தக கண்காட்சி, கோளரங்கம், டெலஸ்கோப், வான் நோக்குதல், அறிவியல் கண்காட்சி, கருத்தரங்குகள் என பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் அனுமதி இலவசம் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளரும் புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளருமான ஆசிரியர் கே. ஜே. ராஜு அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்திகள் ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக