300 லிட்டர் தாய்ப்பால் தானம் வழங்கிய திருச்சி செல்வபிருந்தா ஆசியாவின் முதல் பெண் என்ற விருதை பெற்றுள்ளார்
திருச்சி திருவெறும்பூர் அடுத்த காட்டூர் அம்மன் நகர் செல்வபிருந்தா 2023 - 2024 இரண்டு ஆண்டுகளில் சுமார் 300.17 லிட்டர் தாய்ப்பாலை திருச்சி அரசு மருத்துவமனையில் தானமாக வழங்கி எண்ணற்ற குழந்தைகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.. அவரின் சேவையை பாராட்டி அங்கீகரித்து குழந்தைகளின் தெய்வத்தாய் செல்வபிருந்தாவிற்கு ஆசியா புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனமும், இந்திய புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனமும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவித்துள்ளனர்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக