காரமடை நகராட்சியை கண்டித்து ஆக.5-ல் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை கோவை புறநகர் வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதி காரமடை நகராட்சி சந்தை கடை ஏலத்தில் முறைகேடு செய்து நகராட்சிக்கு வருமானம் இழப்பு ஏற்படுத்தி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள மின் மயானம் பல மாதங்களாக செயல்படுவதில்லை. நகராட்சிக்கு உட்பட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலைகள் காங்கிரீட் சாலைகள் ,சந்தை கடை கால்வாய்கள், தரமற்ற அமைக்கப்பட்டுள்ளது .
திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து; மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கோவை புறநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் 5 .8 .25 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் காரமடை கார் ஸ்டார்ட் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழக குரல் இணையதளச் செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக