மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் 79-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் 79-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது

 


மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் 79-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான திரு எஸ். பி. புருஷோத்தமன் அவர்களின் தலைமையிலும், சிவகங்கை மாவட்ட பொருப்பாளர் திரு பால் நல்லதுரை அவர்களின் முன்னிலையிலும், காங்கிரஸ் கட்சியினர் இந்திய தேசிய கொடியை கொடிக்கம்பத்தில் ஏற்றிய பின்னர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இணைப்புகள் வழங்கி சுதந்திர தினத்தை கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அவர்களின் ஏற்பாட்டில் ஏழை எளியோர் மற்றும் கட்சியினருக்கு உணவு வழங்கப்பட்டது. 


இந்நிகழ்வில் மாவட்டம் மனித உரிமைத்துறை தலைவர் ராஜாராம், கிழக்கு வட்டார தலைவர் காசி ராமலிங்கம், சட்டமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் லிவிங்ஸ்டன், முன்னாள் மற்றும் இந்நாள் மாவட்ட, நகர, வட்டார காங்கிரஸ் கமிட்டியினர், இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், சிறுபான்மைதுறை பிரிவு காங்கிரஸ், ஊடகத்துறை, மனித உரிமைதுறை, இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், சேவாதளம், வார்டு தலைவர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad