79- வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நலம் கல்வி அறக்கட்டளை சார்பில் பொது இலவச மருத்துவ முகாம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 16 ஆகஸ்ட், 2025

79- வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நலம் கல்வி அறக்கட்டளை சார்பில் பொது இலவச மருத்துவ முகாம்.

79- வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நலம் கல்வி அறக்கட்டளை சார்பில் பொது இலவச மருத்துவ முகாம்

கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பில் இந்திய திருநாட்டின் 79- வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நலம் கல்வி அறக்கட்டளை சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி அன்புக்கொடி தலைமை பதி வளாகத்தில் குரு பால பிரஜாதிபதி அடிகளார் தலைமையில் நடைபெற்றது. 

இம் முகாமில் சிறப்பு விருந்தினராக புதிய உலகம் நிறுவனர் சஜீஷ் கிருஷ்ணா , கலப்பை மக்கள் இயக்க தலைவர் பிடி செல்வகுமார், திமுக அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் பாபு, இலவச சட்ட உதவி சங்கம் தலைவர் சுபாஷ் நாடார் , திமுக வழக்கறிஞர் சரவணன், கலப்பை மக்கள் இயக்கம் மாநில மகளிர் அணி தலைவி வரலெட்சுமி, அனிதா, ஒன்றிய செயலாளர் செந்தில் , இளை ஞர் அணி ரவி முருகன் , சமூக ஆர்வலர் ஜெய சுதா ,பேச்சாளர் திரு‌.நாஞ்சில் அமலன் ,பொத்தேடி ராஜ சேகர் , நலம் அறக்கட்டளை தூத்துக்குடி நிர்வாகிகள் மருத்துவர்கள் சுதா , சுபிசன் நரம்பியல் சிகிச்சை மையம் மருத்துவர்கள் டாக்டர். மரிய சுபிசன், 
(மூளை , மற்றும் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுனர்) , பிஸியோ தெரப்பிஸ்ட் டாக்டர். பாலன், ஜோசப் சகாயம் மருத்துவமனை மருத்துவ குழுவினர் உள்ளிட்டோர் இந்த பொது மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.

முடிவில் நலம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் டாக்டர்.நலம் குமார் அவர்கள் அனைத்து கலந்து கொண்டவர்களுக்கும் பத்திரிகை உறவுகளுக்கும் நன்றி கூறினார்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். 
என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad