மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் 79-வது சுதந்திர தின விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 16 ஆகஸ்ட், 2025

மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் 79-வது சுதந்திர தின விழா


மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் 79-வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இயங்கி வரும் தனியார் பள்ளியான பாபா மெட்ரிக் பள்ளியில் 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி 79-வது சுதந்திர தின விழா மிகுந்த உற்சாகத்துடன் மற்றும் தேசப்பற்று உணர்வுடன் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளியின் தாளாளர் திரு ஆர். கபிலன் மற்றும் பள்ளியின் நிர்வாகி திருமதி ஆர். மீனாட்சி அவர்கள் வருகை புரிந்தனர். மேலும் பள்ளியின் நிர்வாகி திருமதி ஆர். மீனாட்சி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றிய பின்னர், அனைவரும் கொடி பாடல் பாடப்பெற்று இவ்விழாவானது தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் அணி வகுப்பு சிறப்பாக நடைபெற்றது. 


அதன் தொடர்ச்சியாக மாணவர்கள் தேசப்பற்று பாடல்கள், நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய நடனங்கள், உரைகள் போன்ற பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளை வழங்கினர். பள்ளி வளாகம் திரைவண்ணக் கொடிகளாலும், அழகிய அலங்காரங்களாலும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது.


முதல்வர் திருமதி எம். சாரதா அவர்கள் உரையில் 'ஒற்றுமை, ஒழுக்கம், பொறுப்பு போன்ற நாட்டு மதிப்புகளை மாணவர்கள் பேணிப் பாதுகாக்க வேண்டும்' என ஊக்குவித்தார். மாணவர்கள் வேலு நாச்சியார், காந்தி, நேரு, குயிலி போன்ற  வேடங்கள் அணிந்து அவர்களின் வரலாறு மற்றும் வீரத்தை பற்றியும் எடுத்துரைத்தனர்.


மானாமதுரையில் உள்ள காந்தி சிலைக்கு பள்ளியின் தாளாளர், நிர்வாகி, முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நேரில் சென்று காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தியும், உரையாடல்கள் நடத்தியும் தேசப்பற்றை வெளிக்காட்டினர். பள்ளியின் தாளாளர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பள்ளியின் தாளாளர் திரு ஆர். கபிலன் அவர்கள் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இறுதியாக அனைத்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு தேசிய கீதத்துடன் விழா நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad