சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய அரசு பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கிய ஆட்சியர்.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் தகவல் பதிவு உதவியாளராக பணியாற்றி வரும் மானாமதுரையை சேர்ந்த திரு குமார் அவர்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற்ற இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சியின்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி இ.ஆ.ப அவர்கள் சிறப்பாக பணியாற்றியமைக்காக குமார் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக நற்சான்றிதழ் வழங்கி தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சிவ பிரசாத் மற்றும் சிவகங்கை மாவட்ட அளவிலான பல்வேறு துறைகளில் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். மேலும் தேவகோட்டை தாலுகா கண்டதேவி வட்டத்திற்குட்பட்ட வருவாய் ஆய்வாளர் திரு துரைராஜா, மானாமதுரை தாலுகா மானாமதுரை டவுன் நில அளவையர் திரு வேல்முருகன் உள்பட மாவட்ட ஆட்சியர் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக