இளையான்குடி 'அதாயி அரபிக் கல்லூரியில்' 79-வது இந்திய சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் சிறுபாலை கோட்டையூரில் அமைந்துள்ள 'அதாயி அரபிக் கல்லூரியில்' 79-வது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்ச்சி தலைவர் ஹாஜி ஹக்கீம் சேட் தலைமையிலும், முதல்வர் சேக் முகமது ஆலிம் பிலாலி முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இளையான்குடி வட்டாட்சியர் உயர்திரு முருகன் அவர்கள் கொடியேற்றி வணக்கம் செலுத்தி, சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து உரையாற்றினார். இறுதியாக வழக்கறிஞர் முஹம்மது அஸ்லம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வில் கோட்டையூர் கிராம அலுவலர் மற்றும் உதவியாளர்கள், கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக