ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 79-வது சுதந்திர தின விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 79-வது சுதந்திர தின விழா

 


ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 79-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.



சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளி தாளாளர்கள் திரு க.சேகர், திரு லெ. லெனின் ஜீவானந்தம், திரு லெ. ஸ்டாலின் ரவீந்திரன் ஆகியோர் தலைமையில் பள்ளி செயலர் மற்றும் முதல்வர் திரு க. வீரபாண்டி, பள்ளி பொருளாளர் திரு க. முருகேசன் ஆகியோர் முன்னிலையில், அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்கேற்புடன் கொடியேற்றம் நடைபெற்றது. 



இதில் பள்ளி தாளாளர் சிறப்புரை ஆற்றினார். பின்னர் மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகளும் பல்வேறு போட்டிகளும் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இறுதியாக செயலர் நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவுற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad