காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் 79வது சுதந்திர தின விழாகொண்டாடப்பட்டது. விழாவில், சிறப்பு விருந்தினராக கமாண்டிங் ஆபிசர் கொலோனல் கபில் துலி (34 TN Indep Coy NCC, தஞ்சாவூர் பங்குபெற்று தேசிய கொடியை ஏற்றினார். பள்ளி சேர்மன் குமரேசன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் உஷா குமாரி வரவேற்புரை ஆற்றினார். விழாவில் மாணவ, மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் பள்ளி சேர்மன் குமரேசன் தலைமையுரை ஆற்றினார். அவர் பேசுகையில் நாம் நிம்மதியாக மூச்சு விடுவதற்கு காரணம் சுதந்திரம். நல்ல சமூகத்தை உருவாக்க நமக்கு கிடைத்த சுதந்திரத்தை சிறந்த ஒழுக்கத்துடனும் கட்டுக்கோப்புடனும் கொண்டாடவேண்டும் என்றார். நமது நாட்டின் தன்மானத்தைக் கப்பாற்றிய போராட்ட வீரர்களுக்கு நன்றி செலுத்துவது நமது கடமையாகும் என்றும் சுதந்திரம் என்பது தட்டில் வைக்கப்பட்ட மிட்டாய் அல்ல வீரர்கள் சிந்திய இரத்தத் துளிகளே என்று கூறி சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து
கமாண்டிங் ஆபிசர் கொலோனல் அவர்கள் சிறப்புரை வழங்கினார். அவர் பேசுகையில் சுதந்திர தினம் என்பது இறந்தகாலம் அல்ல நமது எதிர்காலம் என்றும் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக பேசி மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். பின்னர் மாநில மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்ககளை கௌரவித்தார். துணை சேர்மன் அருண்குமார் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார். துணை முதல்வர் பிரேம சித்ரா நன்றி கூறினார்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக