வல்லம் நகர காங்கிரஸ் சார்பில் சுதந்திர தின விழா
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் நகர காங்கிரஸ் சார்பில் சுதந்திர தின விழா முன்னிட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் காமராஜர், மற்றும் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி ஆகியோர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தேசியக்கொடி ஏற்றி பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது .
நிகழ்ச்சியில் வல்லம் நகர தலைவர் முகமது பாட்சா,முன்னாள் வல்லம் பேரூராட்சி தலைவர் பொன்னுசாமி, கௌரி சங்கர், காமராஜ், சூசைநாதன், பக்கிரி சாமி, சொக்கலிங்கம், அசோக் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக