பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 9 ஆவது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து 65 ஆசிரியர்கள் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 9 ஆவது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து 65 ஆசிரியர்கள் பங்கேற்பு!

 பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின்  9வது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து 65 ஆசிரியர்கள் பங்கேற்பு!
வேலூர் , ஆகஸ்ட் 7 -

கொல்கத்தாவில் நடைபெறும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின்  9வது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து 65 ஆசிரியர்கள் பங்கேற்பு ! ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டதினையும் புதிய ஓய்வூதிய திட்டத் தினையும் ஒன்றிய அரசு உடனடியாக இரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்திட இந்திய அரசை கோரியும் மகளிர் மற்றும் பெண்களுக்கான உரிமைகளும் பாது காப்பும் குறித்து கருத்தரங்கம் மற்றும் பொதுக்கல்வியை பாதுகாப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் வாயிலாக அரசுக்கு கோரிக்கை வைத்தும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய அளவிலான 9வது மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டில் உள்ள 8 ஆசிரி யர் இயக்கங்களின் நிர்வாகிகள் 65பேர் இன்று கொல்கத்தாவிற்கு  விமானம் மூலம் சென்னையிலிருந்து புறப்பட்டனர்.
இது குறித்து கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து முனைவர் செ. நா.ஜனார்த்தனன் தலைமையில் ஆ.ஜோசப் அன்னையா, எஸ். ரஞ்சன் தயாள தாஸ், செ.சரவணன்  பெ.சே.அமர்நாத்,  நல் ஞானசேகரன், டேவிட் ராசன் உள்ளிட்டோர் பயணம் மேற்கொண்டனர் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் அகில இந்திய துணைத்தலைவர் ச.மயில் அகில இந்திய செயலாளர் அ.சங்கர் ஆகியோர் தலைமையில் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன், பொருளாளர் வி.சேரமான்,  முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர் அ.மாயவன், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் எஸ். அன்பழகன், தலைவர் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் எம்.மணி மேகலை, தமிழ்நாடு உயர்நிலை மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் சி.ஜெயக்குமார், தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் சிவஶ்ரீ ரமேஷ், எ.அமலராஜன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் கே.எஸ்.பிரகாசம், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மற்றும் தமிழாசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் உதயசூரியன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் எஸ்.ஞான சேகரன், பொதுச்செயலாளர் எஸ்.கே. குலாம் தஸ்தகீர்,  ஜோசப் அன்னையா நல் ஞானசேகரன் வி சேரமான் சாந்தி உள்ளிட்ட 65பேர் தமிழகத்திலிருந்து கொல்கத்தாவிற்கு பயணம் மேற்கொண் டனர்.9வது அகில இந்திய மாநாட்டிற்கு  தேசிய தலைவர் கே.சி.அரிகிஷ்ணன் தலைமை தாங்குகிறார். தேசிய பொதுச் செயலாளர் சந்திர நவ்தீப் பார்தி, வேலை அறிக்கை சமர்பித்து பேசுகிறார்.  பொரு ளார் பிரகாஷ்சந்திரமோகன்தி நிதிநிலை அறிக்கை சமர்பித்து பேசுகிறார்.  இணை பொதுச்செயலாளர் சுகுமார் பெய்ன், தேசிய துணைத்தலைவர் ச.மயில், தேசிய செயலாளர் அ.சங்கர் ஆகியோர் செயல்பாடுகள் குறித்து பேசுகின்றனர்.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, திரிபுரா, பஞ்சாப், ஹரியானா, நாகாலாந்து, ஜம்மு, காஷ்மீர், ஜார்கன்ட் ஆகிய மாநிலங்களிலிருந்து 600 ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.
அகில இந்திய அளவில் 9வது மாநாடு ஆகஸ்டு 8 முதல் 10 வரை கொல்கத்தா வில் நடைபெற உள்ளது ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டதினையும் புதிய ஓய்வூ திய திட்டத்தினையும் ஒன்றிய அரசு உடனடியாக இரத்து செய்து அனைவருக் கும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்திட இந்திய அரசை கோருதல் 
 அகில இந்திய மாநாட்டில் மகளிர் மற்றும் பெண்களுக்கான உரிமைகளும் பாது காப்பும் குறித்து கருத்தரங்கம் மற்றும் பொதுக்கல்வியை பாதுகாப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் வாயிலாக அரசுக்கு கோரிக்கை வைப்பது , அகில இந்திய பொதுச்செயலாளர் அறிக்கை, பொருளாளர் அறிக்கை அதன் மீதான விவாதம், பல்வேறு மாநிலங்களிலிருந்து சமர்பிக்கப்படும் அறிக்கை அதன் மீதான விவாதம் பல்வேறு தீர்மானங்கள், கருத்தரங்க, பேரணி, பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad