திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, சங்கநேரி ஊரை சேர்ந்தவர் 28 வயதான பிரபுதாஸ் என்பவர் ஆவார். இவர் கூடங்குளத்தில் ஒரு கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று பிரபுதாஸ் தனது இரு சக்கர வாகனத்தில் கோலியன் குளம் ஊர் அருகே வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப் பட்டுள்ளார்.
விபத்து என்று ராதாபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரபுதாஸின் உறவினர்கள் இது விபத்து இல்லை என்றும் அரிவாள் வெட்டு என்றும் கூறிய சந்தேகத்தின் காரணமாக ராதாபுரம் காவல் துறையினர் மேற்படி சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், இருக்கன்துறை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக