திண்டிவனம் அனந்தமங்கலம் அகஸ்தீஸ்வரர் மலைக்கோயிலில் ஆடி வெள்ளி விளக்கு பூஜை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

திண்டிவனம் அனந்தமங்கலம் அகஸ்தீஸ்வரர் மலைக்கோயிலில் ஆடி வெள்ளி விளக்கு பூஜை.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அனந்தமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் மலைக்கோயிலில், ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை (01.08.2025 - ஆடி 16) மாலை 4.00 மணிக்கு விளக்கு பூஜை நடைபெற உள்ளது.

இது சிவன் கோயிலாகும். இங்கு மூலவராக அகஸ்தீஸ்வரர் மற்றும் தாயாராக ஆனந்தவல்லி அம்மன் எழுந்தருளியுள்ளனர். இக்கோயிலை அகஸ்திய முனிவர் நிறுவியதாக நம்பப்படுகிறது. அகஸ்தியர் இங்கு தங்கி சிவபெருமானை வழிபட்டதால், இந்த மலை "அகஸ்தியர் மலை" என்று அழைக்கப்படுகிறது. கோயிலில் உள்ள அகஸ்தீஸ்வரர் சிலை, அகஸ்தியர் பிரதிஷ்டை செய்ததாக கருதப்படுகிறது.

இங்குள்ள ஆனந்தவல்லி அம்மன் பக்தர்களுக்கு ஆனந்தம் அளிப்பதால் அந்தப் பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், கோயிலில் ஆலவட்டம்மன், அடஞ்சியம்மன் என அழைக்கப்படும் கெங்கையம்மன், பச்சையம்மன் போன்ற தெய்வங்களும் உள்ளன. பல புராணக் கதைகள் மற்றும் வரலாற்று சம்பவங்களும் இந்தக் கோயிலுடன் தொடர்புடையவை. இந்த ஆடி வெள்ளி தினம் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்று விளக்கு பூஜை வழிபாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்தியாளர்: அருள்.சி, விழுப்புரம் மாவட்டம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad