விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம், எய்யில் கிராமத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்புமுகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு முன்னாள் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ திரு. மஸ்தான் அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டார். முகாமின் போது, பொதுமக்கள் வழங்கிய பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவை உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும், அரசு வழங்கும் சேவைகள், நலத்திட்டங்கள் மற்றும் ஆதரவு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்கள் அனைவரும் இந்த “உங்களுடன் ஸ்டாலின்” முகாமை தங்களின் தேவைகளுக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளுமாறு திரு. மஸ்தான் அவர்கள் கேட்டுக்கொண்டார். மக்கள் நலனில் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என்பதையும், தமிழ்நாடு அரசு தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய எப்போதும் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
செய்தியாளர்: அருள்.சி, விழுப்புரம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக