கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட 1, 2, 3, 4, 5, 6, 7, 8 மற்றும் 10 ஆகிய வார்டுகளுக்கான மக்கள் சேவைகள், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நேரடியாக அவர்களின் பகுதிக்கு சென்று வழங்கும் வகையில், குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாம், குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளரும் மாவட்ட கல்வி குழுத் தலைவருமான பொறியாளர் வி.சிவகுமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
முகாமின் போது, பல்வேறு அரசு துறைகள் தங்களைத் தனித்தனி அரங்குகளாக அமைத்து, பொதுமக்களுக்கு நேரில் சேவைகளை வழங்கின. இதில் வருவாய் துறை, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சி துறை, மகளிர் நலத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சேவைகள் துறைவாரியாக people-centered முறையில் செயல்பட்டன. மேலும், கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அதிகாரிகளால் பெறப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி நகர திமுக செயலாளர் கே.வி.பி. ஜெய்சங்கர், பேரூராட்சி மன்றத் தலைவர் கோகிலா குமார், துணைத் தலைவர் ராமர், வடலூர் நகர மன்றத் தலைவர் சு.சிவக்குமார், நகர செயலாளர் த.தமிழ்செல்வன், துணை செயலாளர் விடுதலை சேகர், மாவட்ட பிரதிநிதி எம்.கே.குமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், அரசு துறை அதிகாரிகள், மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக