பொதுக்கல்வியை பாதுகாப்போம், ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கான அரசியல் அமைப்பை பாதுகாப்போம் மாநாடு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

பொதுக்கல்வியை பாதுகாப்போம், ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கான அரசியல் அமைப்பை பாதுகாப்போம் மாநாடு !


பொதுக்கல்வியை பாதுகாப்போம், ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கான அரசியல் அமைப்பை பாதுகாப்போம் மாநாடு !
வேலூர் , ஆகஸ்ட் 1 -

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அமைப்புதின கருத்தரங்கம் கல்கத்தா வில் 9வது அகில இந்திய மாநாடு

வேலூர் மாவட்டம் இந்திய பள்ளி ஆசிரி யர் கூட்டமைப்பின் அமைப்பு தினத்தி னை முன்னிட்டு பொதுக்கல்வியை பாது காப்போம், ஆரோக்கியமான ஜனநாயகத் திற்கான அரசியல் அமைப்பை பாதுகாப் போம் என்ற இலட்சினையுடன் இன்று வேலூரில் அமைப்பின் கொடியினை
ஏற்றி வைத்து அமைப்பு தினம் கொண்டா டப்பட்டது.இதற்கான வேலூர் மாவட்ட அமைப்பு தின கருத்தரங்கம் இன்று 01.08.2025 மாலை 5.00 மணியளவில் வேலூர் ஆசிரியர் இல்லத்தில் கூட்டமைப் பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ.ஜோசப் அன்னையா தலைமையில் நடைபெற்றது.  கூட்டமைப்பின் அகில இந்திய செயற் குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் செ.நா. ஜனார்த்தனன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அமைப்பின் கொடியினை ஏற்றிவைத்து பொதுக்கல் வியை பாதுகாப்போம், ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கான அரசியல் அமைப் பை பாதுகாப்போம் என்ற  தலைப்பில் பேசினார். முன்னதாக தமிழ்நாடு முது நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ஆர்.ஜெயக்குமார்  வர வேற்று பேசினார்.  தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் எம்.எஸ். செல்வகுமார், இடைநிலை ஆசிரியர்சங்க மாவட்ட செயலாளர் க.குணசேகரன் ஆகி யோர் முன்னிலை வகித்து பேசினர்.
 மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் தா.சிலம்பரசி, இணை ஒருங்கிணைப் பாளர் கே.மஞ்சுளா, ம.யசோதா மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் டி.ஜெய பிரகாஷ், கே.தனசேகர், டி.கிருஷ்ணன், எம்.பூபாலன், ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.கல்கத்தாவில் உள்ள மகாஜதி சதனில்  நடைபெறும் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க செல்லும் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர்முனைவர்.செ.நா.ஜனார்த்தனன் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசி ரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஆ.ஜோசப் அன்னையா, மாநில துணைத் தலைவர் எஸ்.ரஞ்சன்தயாளதாஸ் ஆகி யோருக்கு  சால்வை அணிவித்தும் நூல் கள் வழங்கியும் பாராட்டினர். 
 
பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
1. வாழ்வாதார கோரிக்கைகளான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்ய ப்பட வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்,  இடைநிலை, முதுகலை, தலைமை ஆசிரி யர்களின்  ஊதிய முரண்பாடுகளை களைய  வேண்டும் திமுக அரசால் வழங் கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்கின்ற பத்து அம்ச கோரி க்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றிடக்கோரி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது
2.  அகில இந்திய அளவில் 9வது மாநாடு ஆகஸ்டு 8 முதல் 10 வரை கொல்கத்தா வில் நடைபெற உள்ளது அதில் தமிழக த்தில் இணைந்துள்ள தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் கழகம், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் சங்கம் உள்ளி ட்ட ஆசிரியர் அமைப்புகளின் நிர்வாகி கள் பங்கேற்பது.
3. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டதி னையும் புதிய ஓய்வூதிய திட்டத்தினை யும் ஒன்றிய அரசு உடனடியாக இரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூ திய திட்டம் நடைமுறைபடுத்திட இந்திய அரசை கோரி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
4. அகில இந்திய மாநாட்டில் மகளிர் மற்றும் பெண்களுக்கான உரிமைகளும் பாதுகாப்பும் குறித்து கருத்தரங்கம் மற்றும் பொதுக்கல்வியை பாதுகாப் போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் வாயிலாக அரசுக்கு கோரிக்கை வைப்பது என தீர்மானிக்கப்பட்டது. 
முடிவில் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்  கழக மாவட்ட செயலா ளர் கே தனசேகர்   நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad