நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் இளையோர் செஞ்சிலுவை சங்க சிறப்பு நிகழ்ச்சி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 9 ஆகஸ்ட், 2025

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் இளையோர் செஞ்சிலுவை சங்க சிறப்பு நிகழ்ச்சி.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் இளையோர் செஞ்சிலுவை சங்க சிறப்பு நிகழ்ச்சி.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கல்வி இணைச் செயல்பாடுகள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். இளையோர் செஞ்சிலுவை சங்க பொறுப்பாசிரியர் ஜென்னிங்ஸ் காமராஜ் வரவேற்றார். தாளாளர் வழக்கறிஞர் பிரபாகர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

அவர் பேசுகையில், செஞ்சிலுவை சங்கத்தின் குறிக்கோள்கள் அனைத்தையும் மாணவர்கள் பின்பற்ற வேண்டும், நாள்தோறும் உடல் நலம் பேணுதல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சிறப்பம்சங்களான சுகாதாரம், சேவை, நட்புறவு ஆகியவை குறித்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது.

செஞ்சிலுவை சங்கத்தினை நிறுவிய ஹென்றி டுனான்ட் வரலாறு குறித்து மாணவர்கள் தெரிந்து கொண்டனர். செஞ்சிறுவை சங்கத்தின் முதன்மையான நோக்கமான மனிதாபிமான சேவைகளை அனைவருக்கும் வழங்குவது குறித்து மாணவர்களுக்கு கூறப்பட்டது. 

செஞ்சிலுவை சங்க பாடல் மாணவர்களுக்கு பாடி காண்பிக்கப்பட்டது. ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக. MT.அந்தோணி ராஜா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad