மேட்டுப்பாளையம் அளவிலான குறுமைய விளையாட்டு போட்டிகளில் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை..
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குறு மைய விளையாட்டுப் போட்டிகள் புஜங்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகின்றன இதில் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.14 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் கையுந்து போட்டியில் முதலிடம் பெற்று வாகை சூடி உள்ளனர். இதேபோல் மாணவிகள் எரிபந்து போட்டியில் 14 வயதிற்கு உட்பட்ட மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் முதலிடம் பெற்று வாகை சூடி உள்ளனர். மேலும் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களையும் வெற்றி பாடுபட்ட உடற்கல்வி ஆசிரியைகள்.Aஹெலன் லூர்து மற்றும் செல்வி s தனுஷ்யா ஆகியோரை இப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் s சாக்ரடீஸ் குலசேகரன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர் கழகத்தின் தலைவர் D இராமதாஸ் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பேபி ஆகியோர் பாராட்டினார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக