காரமடை சாஸ்திரி நகர் பகுதியில் எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டு திடீர் தீ விபத்து..!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் காரமடை நகராட்சிக்கு உட்பட்ட சாஸ்திரி நகரில் காமராஜ் வயது 38 என்பவர் ஓட்டு வீட்டில் குடும்பத்தோடு வசித்து வருகின்றார். நேற்று காலை 10:15 மணி அளவில் வீட்டின் திடீர் மின் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்தது. தீ பற்றி எரிந்ததில் வீட்டின் மேல் கூரை, தொலைக்காட்சி ,பீரோ, கட்டில், பெட்டு, மிக்ஸி ,பாத்திரங்கள் ,என ஏராளமான பொருட்கள் சேதம் அடைந்தன .அருகில் இருந்த குடும்பத்தினர் தண்ணீர் ஊற்றி அணைக்க முற்பட்டனர் மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக தீவிரமாக செயல்பட்டு தீயை அணைத்தனர் இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக