வேலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமை யில் தமிழ் கனவு நிகழ்ச்சி!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 6 ஆகஸ்ட், 2025

வேலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமை யில் தமிழ் கனவு நிகழ்ச்சி!!

வேலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமை யில் தமிழ் கனவு நிகழ்ச்சி!!
மண்டல கல்லூரி இணை இயக்குனர் டாக்டர். அ.மலர் பங்கேற்று சிறப்புரை!!

வேலூர் , ஆகஸ்ட் 6 -

வேலூர் மாவட்டம், வேலூர் ஊரிசு கல்லூரி டிபோர் அரங்கத்தில், மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. மாவட்டாட்சியர் சிறப்புரையாற்றி துவக்கி வைத்ததை தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் சொற்பொழிவாளர்/ வழக்கறிஞர் அ.அருள்மொழி, தமிழ்நாடு கண்டபுதுமை பெண்கள் என்ற தலைப்பில் சிறப்புரை யாற்றி, தரமான கேள்விகளை எழுப்பிய மாணவர்களுக்கு கேள்வியின் நாயகன் என்ற சான்றிதழை வழங்கி பாராட்டி வாழ் த்து தெரிவித்தனர். 
இந்நிகழ்ச்சியில் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்கு நர் முனைவர். அ.மலர், முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி முதல் வர் ஸ்ரீதர், ஊரீசு கல்லூரி முதல்வர் ஆனி கமலாப்ளாரன்ஸ் கல்லூரி மாணவ மாண விகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad