காட்பாடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்! நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் பங்கேற்பு!!
வேலூர் , ஆகஸ்ட் 6 -
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, தாராபடவேடு, நாராயண கல்யாண மண்டபத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமை தொடங்கி வைத்து, மனு அளித்த பொதுமக்களுக்கு அதற்கான ஆணைகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். இந்நிகழ் வின்போது வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, மாநகராட்சி மேயர் சுஜா தா, துணை மேயர் சுனில்குமார், ஆணை யாளர் இலட்சுமணன், 1 வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, காட்பாடி ஒன்றிய குழு தலைவர் த. வேல் முருகன், வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் மாமன்ற உறுப்பினர் டீட்டா சரவணன் உட்பட பலர் உடனிருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக