மானாமதுரையில் ஆழ்துளை கிணறு மற்றும் தண்ணீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் வலியுறுத்தல் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 20 ஆகஸ்ட், 2025

மானாமதுரையில் ஆழ்துளை கிணறு மற்றும் தண்ணீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் வலியுறுத்தல்

 


மானாமதுரையில் ஆழ்துளை கிணறு மற்றும் தண்ணீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் வலியுறுத்தல்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், சிப்காட் கல்குறிச்சி ஊராட்சி மானாமதுரை தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள ராஜேந்திரன் நகர் 2-வது வார்டில் பல ஆண்டுகளாக பயன்படுத்தி இருந்து வந்த ஆழ்துளை கிணறு மற்றும் சிண்டெக்ஸ் தொட்டி ஆகியவை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்து பொதுமக்களின் பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வரும் அவலநிலை நீடித்து வருகிறது. மேலும் இந்த ஆழ்துளை கிணறு மற்றும் தொட்டியானது கனிமவள நிதி 2015-16 ஆம் ஆண்டு சுமார் 6.30 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தொடக்கப்பட்டது. இந்த ஆழ்துளை கிணறு மற்றும் தொட்டியைதான் இப்பகுதி பொதுமக்களின் ஈமக்கிரியை காரியங்களுக்கு பயன்படுத்தி வந்தனர். தற்போது பழுதான நிலையில் உள்ளதால் மேற்படி காரியங்களை செய்ய வழியில்லாமல் பொதுமக்கள் மிகவும் வேதனையடைந்து வருகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கொடுத்தும் எவ்வித பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில் கல்குறிச்சி ஊராட்சியில் உள்ள ராஜேந்திரன் நகர் 2-வது வார்டு பொதுமக்கள் சார்பாக மானாமதுரை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஆழ்துளை கிணறு மற்றும் தண்ணீர் தொட்டியை பழுது நீக்கி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி கடந்த புதன்கிழமையன்று பொதுமக்கள் மனு மூலமாக வலியுறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad